வியாழன், 4 நவம்பர், 2010

மரணப்படுக்கையில் நான்

ஞாயிறும் உறங்குதடி,
வெள்ளியும் முளைக்குதடி.
உன்னை நான் பார்க்கா,
நாட்களும் கூடுதடி.
கண்மூடி சிலநிமிடம் என் கண்மணியை பார்க்கயிலே,
பல மணித்துளிகளும் சில நோடித்துளிகளாக குறையுதடி.
உன்னைக்கருவாக நான் சுமந்து ஈன்றெடுத்த கவிதைகளை,
அணைத்துணர நீயில்லையே.
நான் உயிர் கொடுத்து,
நீ உடல் கொடுத்த நம் காதல் சின்னம்.
என்னை வினவுகிறான் "அம்மா எங்கே என்று".
எவ்வளவு நாள் தான் உன்னை பாராமல் நான் இருப்பேன்.
உன்னருகில் நான் உறங்க இடமும் இருக்குதடி,
உன்னை நான் பார்கவிருகும் நாட்களும் குறையுதடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக